தவறு இழைக்கிறதா!

தேர்தல் கமிஷன் மீது காங்., குற்றஞ்சாட்டுகிறது. ஹிமாச்சல், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் காங்., அரசு ஆட்சி அமைத்துள்ளது. ராகுலும், இரு தேர்தல்களில் வென்றார். அவரது சகோதரியும், ஒரு முறை வென்றுள்ளார். இதற்குபின்பும், தேர்தல் கமிஷன் தவறிழைப்பதாக அவர்கள் நம்புகின்றனரா?
நலின் கோலி, செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,
அனுமதிக்க மாட்டோம்!
இந்தியாவை ஒரே குரல், ஒரே கட்சி, ஒரே சித்தாந்தம் உடைய நாடாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நம் நாடு, ஒரே வண்ணத்தில் ஆன ஓவியம் அல்ல; அது பல கோடி மக்களின் ஓவியம். நாம் அரசியலமைப்பை நம்புகிறோம்; அதை, நாம் ஒவ்வொருவரும் மூச்சாக பாதுகாக்கிறோம். கூட்டாட்சியை கேலிக்கூத்தாக்கும், நடவடிக்கையை நாம் தடுக்க வேண்டும்.
அபிஷேக் சிங்வி ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
தகுதிக்கு அழகல்ல!
தேர்தல் கமிஷன், எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காத நற்பெயர் பெற்ற அமைப்பு; பீஹார் உட்பட மற்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதிசெய்ய, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் கமிஷன் குறித்து அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சி தலைவர் என்ற தகுதிக்கு அழகல்ல.
ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
மேலும்
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!