குண்டர் சட்டத்தில் வாலிபருக்கு 'காப்பு'

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் நெட்டவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 35; இவர், தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம், வெப்படை போலீசார் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும், சில பெண்களை தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண்கள் வெப்படை போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, வெப்படை போலீசார் வினோத்குமாரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வினோத்குமார் மீது மூன்று வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., பரிந்துரைத்தார். அதையேற்று உத்தரவிட்டதையடுத்து, குண்டர் சட்டத்தில், நேற்று வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement