கேபிள் ஒயர் திருடிய 4 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி பகுதியில், தனியார் மொபைல் நிறுவனம் சார்பில், பதிப்பதற்காக சாலையோரம் கேபிள் ஒயர் வைத்திருந்தனர்.

அவற்றை கடந்த மாதம், 20ம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, பே.தாதம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், 50, வேடியப்பன், 50, கோபி, 40, கோபிநாதம்பட்டியை சேர்ந்த ரமேஷ், 41, ஆகிய, நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement