500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி

மாஸ்கோ: 500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கம்சட்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது கடைசியாக 15ம் நூற்றாண்டில் தான் சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியது. அதன்பின்னர் எரிமலையின் சீற்றம் குறைந்து அமைதியாக இருந்து வந்துள்ளது.
இந் நிலையில், 500 ஆண்டுகள் கழித்து இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது. ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது. எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சட்காவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் நீட்சியே இது, மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.




மேலும்
-
பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்
-
திருமாவின் இன்றைய குறி தேர்தல் கமிஷன்!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
-
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
உத்தராகண்டில் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 50 பேரின் கதி என்ன?
-
அலட்சியத்தால் குறுவைப்பயிர்கள் பாதிப்பு: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு