நல்லம்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்


நல்லம்பள்ளி, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சதீஷ், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி.,


மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டனர். தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டனர். இதில், 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். தேவைக்கேற்ப இருக்கைகள் இல்லாததால், பரிசோதனைக்கு வந்தவர்கள் வரிசையில், நீண்ட நேரம் காத்திருந்து பரிசோதனைகளை செய்து கொண்டனர்.

Advertisement