மாயனுார் ஆற்று வழித்தடத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி

கிருஷ்ணராயபுரம், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, மாயனுார் காவிரி ஆற்று பகுதியில் பாதுகாப்பாக மக்கள் விழாவை கொண்டாடும் வகையில், காவிரி ஆறு செல்லும் வழித்தடங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் கதவணை உள்ளது. காவிரி படுகை அருகில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இன்று ஆடி பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அப்போது நுாற்றுக்கணக்கான மக்கள் கோவிலுக்கு செல்வர். மக்கள் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு செல்லும் வகையிலும், ஆழமான பகுதிகளுக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கும் பணியும் நடந்தது.
நீர்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ்துறைகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement