ஆகஸ்ட் முழுதும் பேச ரூ.1 போதும் பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின சலுகை

சேலம்,இந்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின சலுகை திட்டம், கடந்த, 1ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முழுதும், பி.எஸ்.என்.எல்., '4ஜி' சேவையை இலவசமாக சோதித்து பார்க்க, வெறும், 1 ரூபாய் கட்டணத்தில் வாய்ப்பு அளிக்கிறது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, '4ஜி' தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க, இத்திட்டத்தில் உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்பு, தினமும், 2 ஜி.பி., அதிவேக டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., பி.எஸ்.என்.எல்., சிம் ஒன்று இலவசமாக கிடைக்கும்.

'ஆத்ம நிர்பார் பாரத்' திட்டத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள, '4ஜி' சேவை மூலம், இந்தியா, சொந்த தொலை தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய சில நாடுகளில் ஒன்றாக உள்ளதில், பி.எஸ்.என்.எல்., பெருமை கொள்கிறது. உள்நாட்டு நெட் வொர்க்கை, 30 நாட்களு க்கு இலவசமாக சோதித்து பார்க்க, வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
'மேக் - இன்- இந்தியா' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுதும் ஒரு லட்சம், '4ஜி' தளங்களை, பி.எஸ்.என்.எல்., நிறுவி வருகிறது. இது பாதுகாப்பான, உயர்தர, அதேநேரம் மலிவான மொபைல் இணைப்பின் மூலம், 'டிஜிட்டல்' இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல். அதனால் அருகே உள்ள சேவை மையம் அல்லது பி.எஸ்.என்.எல்., மேளா நடக்கும் இடங்களில் சுதந்திர திட்டத்தை பெறலாம் என, சேலம் வணிகப்பகுதி பொது மேலாளர் ரவீந்திர
நாத் தெரிவித்துள்ளார்.

Advertisement