2 மணி நேரத்தில் 85 மி.மீ., விழுப்புரத்தில் கனமழை

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இரண்டு மணி நேரம் பெய்த மழையால், நகரில் பல இடங்களில் மழை நீர் குளமாக தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.
இந்திராநகர் ரயில்வே தரைப்பாலத்தில், மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை நெடுஞ்சாலை உட்பட தாழ்வான பல இடங்களிலும், மழை நீர் குளம் போல் தேங்கியது.
பஸ் நிலையம், ரயில்வே தரைப்பாலத்தில், மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து அகற்றப்பட்டது. மழை நீர் பல இடங்களில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மாவட்டம் முழுதும் மழை பரவலாக பெய்தது, கடும் வெயில் தாக்கத்திற்கு ஆறுதலாக அமைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
-
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement