பெண்கள் குடிநீர் புகார்; எம்.எல்.ஏ., கண்டிப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.

முகாமை பார்வையிட்ட எம்.எல்.ஏ., வெங்கடேசனை தாதகவுண்டன்பட்டி எம்.ஜி.ஆர்., காலனி பெண்கள் சூழ்ந்து கொண்டனர். 'தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீருக்காக சிரமப்படுகிறோம்' என வேதனை தெரிவித்தனர்.

ஒன்றிய அதிகாரிகளை அழைத்த எம்.எல்.ஏ., வெங்கடேசன் 2 நாட்களில் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். சரியில்லாத பைப்புகள் என்பதால் மீண்டும், மீண்டும் உடைகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களை கண்டித்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., 'நான் ஒரு 'பைப் லைன்' வேலை பார்க்கிறேன். நாளை அது உடையுமா என பார்க்கலாமா. சரியில்லாத 'பைப்' எனத் தெரிந்தும் அமைப்பதற்குத்தான் கான்ட்ராக்ட் விடுறீங்களா என்று கேட்டதால் அதிகா ரிகள் திகைத்துப் போயினர்.

Advertisement