டில்லி மத்திய செயற்குழு கூட்டம் புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்பு

புதுச்சேரி : டில்லியில் நடக்கும் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு மத்திய செயற்குழு கூட்டத்தில் புதுச்சேரி நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்க தலைவர் மோகன் அறிக்கை:

தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் டில்லியில் நடக்கிறது.

புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள், வீர தாய்மார்கள் நலச்சங்க தலைவர் மோகன், பொது செயலாளர் செல்வமணி பங்கேற்கின்றனர். இதில், 8வது ஊதிய குழுவிற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில், பரிந்துரை செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்க உள்ளனர்.

நாளை 5ம் தேதி டில்லி போர் வீரர்கள் நினைவு சின்னத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் சார்பில், அஞ்சலி செலுத்துகின்றனர். 6ம் தேதி மத்திய படை வீரர்கள் நலவாரிய செயலாளரை சந்தித்து, புதுச்சேரியில் 6 ஆண்டுகளாக நடக்காமல் உள்ள முப்படை நலவாரிய ஆண்டு கூட்டத்தை கூட்டுவது குறித்தும், புதுச்சேரி முப்படை நலவாரியத்திற்கு ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி ஒருவரை, இயக்குனராக நியமிக்க வேண்டும் என, வலியுறுத்த உள்ளனர்.

Advertisement