வேலை வாய்ப்பு முகாம் : 641 பேருக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி : தச்சூர் பாரதி கல்லுாரியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 641 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கல்லுாரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாநில அளவிலான தனியார் நிறுவனங்கள், மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் என 199 நிறுவனங்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.
முகாமில், மாவட்டத்தில், 8ம் வகுப்பு முதல் முதுகலை மற்றும் பொறியியல் வரை படித்த 2,551 பேர் பங்கேற்றனர். இதில், 641 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 13 பேர் திறன் பயிற்சி பெற பதிவு செய்தனர்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தேர்வானவர்களுக்கு கலெக்டர் பணி ஆணை வழங்கினார். தொடர்ந்து, நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், பணிநியமன ஆணை பெற்றவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) கவிதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் செங்கதிர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!