ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?

1


லக்னோ: ஆக்ராவில் பிறந்த 80 வயதான சாகசக்காரர் மற்றும் தொழில் அதிபர் அர்விந்தர் சிங் ப்ளூ ஆர்ஜின் மிஷனில் ஐந்து மற்ற குழு உறுப்பினர்களுடன் விண்வெளிக்கு பறந்தார்.

மேற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளம் ஒன்றில் இருந்து ஆக்ராவில் பிறந்த 80 வயதான சாகசக்காரர் மற்றும் தொழில் அதிபர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். இது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது.



அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பீசோஸ் சார்பில் நடத்தப்படும் இந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், வசதி படைத்தவர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறது. இதுவரை இந்த நிறுவனம் சார்பில் 70 பேர் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


அந்த வகையில் இப்போது இந்தியாவைச் சேர்ந்த அரவிந்தர் சிங் உட்பட 6 பேர் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

யார் இந்த அரவிந்தர் சிங்?



* ஆக்ராவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் அர்விந்தர் சிங். இவர் அக்டோபர் 13ம் தேதி, 1945ம் ஆண்டு அன்று ஆக்ராவில் பிறந்தார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.



* இப்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பெவர்லியில் வசிக்கிறார்.1977ம் ஆண்டு கிரீன் கார்டு பெற்ற பிறகு, 1979ம் ஆண்டு முதல் அவர் அமெரிக்க குடிமகனாக இருந்து வருகிறார்.



* இவருக்கு 1979ல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.


* டார்ஜிலிங்கில் உள்ள ஸ்காட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

Advertisement