வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு

சென்னை: வங்கமொழியை வங்கதேச நாட்டின் மொழி எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய டில்லி போலீசாரின் செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கமொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய டில்லி போலீஸாருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார். டில்லி போலீசாரின் இந்த செயல் ரவிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் தாய்மொழிக்கு அவதூறு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது, என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, டில்லி போலீசாருக்கு செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; "மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி போலீஸ், பெங்காலி மொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டுள்ளது. இது நம் தேசிய கீதம் எழுதப்பட்ட மொழியை நேரடியாக அவமதிக்கும் செயல்.
இந்த பிழை தற்செயலானது அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைத்து மதிப்பிடும் ஒரு இருண்ட ஆட்சியின் மனநிலையாகும். ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்க மொழிக்கும், அம்மாநில மக்களுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பாதுகாவலராக நிற்கிறார். இந்தத் தாக்குதலுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுப்பார்," எனக் குறிப்பிட்டுள்ளார்













மேலும்
-
கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்; ஓபிஎஸ் கேள்விக்கு நயினார் பதில்
-
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை
-
ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா
-
ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்
-
இந்தியாவில் முதல் சார்ஜிங் நிலையம்: அறிமுகப்படுத்தியது டெஸ்லா
-
கர்நாடகாவில் 19 மயில்கள் மர்மமான முறையில் இறந்தது; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி