பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள நந்தவனத்தில் பழமை வாய்ந்த பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
மேலும், பக்தர்கள் பெரியாயி அம்மன் சுவாமி மீது சிவப்பு நிற சேலை அணிவித்து, மஞ்சள் மற்றும் குங்குமம் துாவினர். தொடர்ந்து, 30 அடி நீளமுள்ள மாலை மற்றும் கண்ணாடி வளையல்கள் அணிவித்து, 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை ஏற்றி சுவாமி வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நேற்று காலை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, சுவாமி வழிபாடு செய்து, குடும்பத்தினருடன் அசைவ உணவுகளை சாப்பிட்டனர். இதனால் நகர பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!