கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுார் கிராமத்தில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருக்கோவிலுார் நகராட்சிக்கு அருகாமையில் இருக்கும், டி.கீரனுார் கிராமத்தில் நகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய திட்ட இயக்குனர் மற்றும் திருக்கோவிலுார் நகராட்சியை கண்டித்து, திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், டி.கே.மண்டபம் கூட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் குரு, ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க துணை செயலாளர் அன்புமணி, மாவட்ட தலைவர் சத்யா, பொருளாளர் ஹரிமகேஸ்வரி, சமூக நீதிப் பேரவை தலைவர் செல்வராஜ், மாநில துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

கிளைச் செயலாளர் செந்தில், தலைவர் சதீஷ் நன்றி கூறினர்.

Advertisement