மாநில காங்., செயலாளர் பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி : ஈரம் ராஜேந்திரன் பிறந்தநாள் விழாவை யொட்டி, மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காங்., கமிட்டி மாநில செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான ஈரம் ராஜேந்திரனின் பிறந்தநாளை யொட்டி, தொகுதியில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப ்பு, பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற ்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, காட்டாமணி குப்பம் லலிதா மகாலில் நடந்தது.
முன்னதாக ஈரம் ராஜேந்திரன் எழுதிய 'முத்தியால்பேட்டை கனவும் களமும்' நுாலை காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சினிமா பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வெளியிட்டனர்.
தொடர்ந்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க செயின், இரண்டாம் பரிசு 6 கிராம் செயின், மூன்றாம் பரிசு 4 கிராம் செயின் வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 90 சதவீதம் மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப், தங்க காயின் வழங்கப்பட்டது.
10ம் வகுப்பில் 90 சதவீதம் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டேப், தங்க காயினும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஸ்மார்ட் டிவி, தங்க காயின் வழங்கப்பட்டது.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 70 சதவீதம் மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஸ்மார்ட் மொபைல், தங்க காயினும், அதே போல் 60 சதவீதம் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பிராண்டட் ஸ்மார்ட் வாட்ச், தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன், காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் கவுன்சிலர் குமரன் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!