உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு

21


வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.


ரஷ்யாவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் அதிக எண்ணெய் பொருட்களை வாங்குவதால், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.


அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி ஏதுமில்லை, ரஷ்யாவிடம் இருந்து வழக்கம் போல எண்ணெய் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் குற்றம்சாட்டியுள்ளார்.


அவர் கூறுகையில், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதன் மூலம் இந்தியா, உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று டிரம்ப் தெளிவாக கூறியுள்ளார். இதில், அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதில் இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது," என்று கூறியுள்ளார்.

Advertisement