அதிகாரத்தை பகிர தயக்கம் ; முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக சாடிய டிகே சிவகுமார்

புதுடில்லி: சில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் நிலையில், ஒரு சிலரோ அதிகாரத்தை பகிர்வதற்கு உடன்படுவதில்லை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை துணை முதல்வர் டிகே சிவகுமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சூழலில், முதல்வர் மாற்றப்பட இருப்பதாகவும், துணை முதல்வர் டிகே சிவகுமார் முதல்வாக பொறுப்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்த சித்தராமையா, இன்னும் எஞ்சிய காலத்திற்கு நானே முதல்வர் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார்.
ஆனால், டிகே சிவகுமார் அவ்வப்போது, முதல்வர் பதவிக்கான தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த நிலையில், டில்லியில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் டிகே சிவகுமார், மறைமுகமாக முதல்வர் சித்தராமையாவை விமர்சித்திருப்பது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது; கடந்த 2004ம் ஆண்டு சோனியாவை பிரதமராக பதவியேற்கும்படி அப்போதைய ஜனாதிபதி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்று கூறினார். ஒரு சீக்கியர், ஒரு சிறுபான்மையினர் மற்றும் ஒரு பொருளாதார நிபுணர் நாட்டைக் காப்பாற்றலாம் என்று நம்பி, அவரே பிரதமராக வேண்டும் என்று முடிவு செய்தார். இதை அரசியல் தியாகத்தின் ஒப்பற்ற செயல்.
இவ்வளவு பெரிய ஜனநாயகத்தில் இப்படி யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய பதவியை கூட யாரும் தியாகம் செய்ய தயாராக இல்லை. பஞ்சாயத்து கவுன்சிலர் கூட பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. சில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் சிலர் அதிகாரத்தை பகிரவே உடன்படுவதில்லை, என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!