ரயில் கண்ணாடி உடைப்பு பயணியர் அலறல்
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை, 5ல் நேற்று விவேக் எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. பயணியர் ஏறிக்கொண்டிருந்த நிலையில், 'பி6 - ஏசி' பெட்டி பகுதியில், வெளியே நின்றிருந்த ஒருவர், 'ஏசி' பெட்டி கண்ணாடியை அடித்து சேதப்படுத்தினார். பயணியர் அலறியடித்து இறங்கினர். தொடர்ந்து மற்றொரு கண்ணாடியை உடைத்தார்.
அவரது கையில் ரத்த காயம் ஏற்பட்டது. பயணியர் அவரை பிடித்தனர். கண்ணாடி உடைக்கப்பட்ட இடத்தில் துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின் லோகோ பைலட், உடைந்த ஜன்னல் பகுதியை பார்வையிட்ட பின், ஒரு மணி நேர தாமதத்துக்கு பின் ரயிலை இயக்கினார்.
இதனிடையே அங்கு வந்த போலீசார், கண்ணாடியை உடைத்தவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரித்தபோது, பீஹாரை சேர்ந்த கவுரவ் குமார், 22, காதல் விவகாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
Advertisement
Advertisement