விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் உலக உறுப்பு தான தின விழிப்புணர்வு
சேலம்: சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி, கே.எச்.ஐ., அமைப்பு இணைந்து, உலக உறுப்பு தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கல்லுாரியில் நடத்தின. கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் நீலமேகம், உறுப்பு தான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, கே.எச்.ஐ., அமைப்பின் நிறுவனர் பிரபு காஞ்சி, ஆலோசகர் சுப சாந்தினி பழனிசாமி பங்கேற்றனர்.
உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்களான, சேலம் அரசு மருத்துவமனையின் அன்புதுரை, ஈரோடு அரசு மருத்துவமனை பாலசக்தி, தர்மபுரி அரசு மருத்துவமனை அப்துல் ரசாக், உறுப்பு தான விழிப்புணர்வு குறித்து பேசினர்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி, விம்ஸ் மருத்துவமனையில் உறுப்பு மாற்று குழுவை அங்கீ கரிக்கும் விதமாக செயல்படுவோருக்கு, கே.எச்.ஐ., அமைப்பு மூலம் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பரிசு பெற்றவர்களை, விம்ஸ் மருத்துவமனை துணை மருத்துவ இயக்குனர் அசோக் வாழ்த்தினார்.
இத்தினம் குறித்த விழிப்புணர்வுக்கு, மவுன மொழி நாடகம், தொடர்ந்து, 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து, உடல் உறுப்பு தான உறுதிமொழியை
ஏற்றனர். இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி பேராசிரியை தமிழ் சுடர், கே.எச்.ஐ., அமைப்பின்
உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!