போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி: ஆடிபெருக்கையொட்டி நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல் விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு வந்திருந்தனர். இதனால் 12 முதல், 15 கிலோ எடையுள்ள ஆடுகள், 11,000 முதல், 12,000 ரூபாய் வரையும், 15 முதல், 18 கிலோ எடையுள்ள ஆடுகள், 12,000 முதல், 15,000 ரூபாய் வரையும் விற்பனையானது. அதேபோல் கோழிகள் கிலோ 450 முதல், 550 ரூபாய் வரை விற்பனையானது.


போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 75 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஆடுகள், கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், வழக்கத்தை விட, கூடுதல் விலைக்கு விற்றதால், மன நிறைவுடன் சென்றனர்.

Advertisement