கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை பெத்ததாளாப்பள்ளியில் புதிதாக அமைத்துள்ள வன்னி முனீஸ்வரர் கோவிலில், நேற்று பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.


கோவிலில் புதிதாக வைத்துள்ள, 5 அடி உயர பஞ்சலோகத்தால் ஆன முனீஸ்வரர் மூலவர் சிலையை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நெசவாளர் தெரு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில்,
சுவாமிக்கு, 5,000 வளையல்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.

Advertisement