இ.கம்யூ., மாநாட்டில் தளி எம்.எல்.ஏ., நடனம்

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில், இ.கம்யூ., கட்சியின் மாவட்ட மாநாடு, செங்கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தளி, எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செங்கொடி ஏந்தி, பேரணி நடந்த பின், பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது மேடையில், பொதுவுடமை கட்சியின் பிரசார பாடல்களை, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கத்தார் குழுவினர் பாடினர்.


அப்போது உற்சாக மிகுதியில், மாநில செயலாளர் முத்தரசன், சுப்பராயன் எம்.பி., மற்றும் பல ஆயிரம் தொண்டர்கள் முன்னிலையில், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கட்சி கொடியுடன் சிறிது நேரம் மேடையில் நடமாடினார். இதனால் தொண்டர்கள் உற்சாகமாகவே, அவர்களும் இசைக்கேற்ப நடனமாடினர்.

Advertisement