செல்லப்பிராணிகள் நன்கொடை: டென்மார்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள்

கோபன்ஹேகன்: வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை எங்களுக்கு நன்கொடையாக கொடுங்கள் என்று டென்மார்க்கின் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

டென்மார்க் நாட்டில் ஆல்போர்க் மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கை உணவு அளிப்பதை நோக்கமாக கொண்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள்,செல்லப்பிராணிகளை கருணை கொலை செய்வதாகவும், வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள், பல்வேறு காரணங்களுக்காக கொடுக்கப்பட வேண்டிய ஆரோக்யமான பிராணிகள் இருந்தால் எங்களிடம் நன்கொடையாக வழங்கலாம் என்று மிருகக்காட்சி சாலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

வீட்டில் வளர்க்கப்படும் கினிப் பன்றிகள், முயல்கள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட பிராணிகளை கருணை கொலை செய்ய எங்களுக்கு வழங்கலாம்.

கருணை கொலை செய்யப்பட்ட பிராணிகள், இங்குள்ள விலங்குகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படும். அந்த வழியில் எதுவும் வீணாகாது. இங்குள்ள விலங்குகளின் இயற்கையான நடத்தை, ஊட்ட்சத்து மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்கிறோம்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement