58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க குறைதீர் கூட்டத்தில் மனு

மதுரை, : 'வைகை அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்' என குறைதீர் கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மனு கொடுத்தார்.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் மனு: உசிலம் பட்டி பகுதியில் 58 கிராம கால்வாயில் கடந்த ஆண்டு தண்ணீர் திறக்க வில்லை. இதனால் குடிநீர், பாசனம், கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

வைகை அணையில் 69 அடி நீர்மட்டம் உள்ள நிலையில், 58 கிராம கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறந்தால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.

நரிக்குறவர் வலியுறுத்தல் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பினர் மனு: சக்கிமங்கலம் நரிக் குறவர் காலனியில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதிகாரிகள் வேறுவீடு கட்டித் தரும் வரை வேறிடத்தில் பாதுகாப்பாக இருங்கள் என்றனர்.

பார்வையிட்ட பி.டி.ஓ., ரேஷன்கார்டு, ஆதார்கார்டு நகல்களை பெற்று சென்றார். சமீபத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தும் விட்டது. எனவே விரைவில் வீடு கட்டித் தரவேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

வலைசேரிபட்டி சரவணன் அளித்த மனு: குடிமக் களின் கைரேகை, கருவிழிபடலம் என பயோமெட்ரிக் பதிவைக் கொண்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனடிப் படையில் ரேஷன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதைப் பின்பற்றி சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை சரிபார்த்து ஓட்டளிக்க அனுமதித்தால் முறைகேடை தவிர்க்கலாம், எனத் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் அளித்த மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 65 ஆண்டு களுக்கும் மேலாக வியாபாரம் செய்து வந்தவர்களை ஒரே நாளில் அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement