மாணவி கொலை வழக்கு பயாஸ் ஜாமின் மனு தள்ளுபடி

தார்வாட் : கல்லுாரி மாணவியை கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமின் மனுவை, முதலாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் பி.வி.பி., கல்லுாரியில் எம்.சி.ஏ., படித்து வந்த ௩ம் ஆண்டு மாணவி நேஹா ஹிரேமத்தை, பெலகாவியை சேர்ந்த பயாஸ், 24, என்ற மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இவ்வழக்கு, ஹூப்பள்ளியின் கூடுதல் முதலாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, பயாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். 'சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்டது போன்று தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு மீதான விசாரணையில், நேற்று தீர்ப்பு அளிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. நீதிமன்றம் கூடியதும், பயாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பயாஸ் தரப்பு வக்கீல், 'பயாசை கைது செய்யும்போது, போலீசார் உரிய முறையில் நடந்து கொள்ளவில்லை. அவரை கைது செய்தது தொடர்பாக, அவரின் பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை. இதன் அடிப்படையில், மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பயாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அவர் மீதான வழக்கு விசாரணையை, செப்., 6ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் பயாஸ் ஆஜராக உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டு ஓராண்டு, நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயாஸின் ஜாமின் எதிர்பார்ப்பு கலைந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும்
-
நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
-
ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?
-
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு
-
டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
-
காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிரக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்