கால்பந்து: இந்தியன் ஆர்மி அபாரம்

ஜாம்ஷெட்பூர்: இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. இதன் 134 வது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன.
நேற்று ஜாம்ஷெட்பூரில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியன் ஆர்மி அணி, நேபாளத்தை சேர்ந்த திரிபுவன் ஆர்மி அணிகள் மோதின. போட்டியின் 27வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கமேய், ஒரு கோல் அடித்தார். 29 வது நிமிடம் முரட்டு ஆட்டம் ஆடிய திரிபுவன் கோல் கீப்பர் பிகாஷ் குது, 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார்.
அப்போது கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் கிறிஸ்டோபர், கோல் போஸ்ட் மீது அடித்து வீணடித்தார். முடிவில் இந்தியன் ஆர்மி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் 3 புள்ளியுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஜாம்ஷெட்பூர் (6 புள்ளி) அணி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
'இறந்த பொருளாதாரத்தில்' இது எப்படி சாத்தியம்; இந்தியாவில் ஓராண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட டிரம்ப் நிறுவனம்!
-
அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஹிமாச்சலில் திடீர் வெள்ளம்; சிக்கி தவித்த 400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் மீட்பு
-
அரசம்பட்டு கோவிலில் தேர் திருவிழாவிற்கு தடை
-
எஸ்.எஸ்.ஐ படுகொலை சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை
Advertisement
Advertisement