கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கோவை, சென்னை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டியது. நீலகிரியில் பலத்த மழை எதிரொலியாக அங்குள்ள சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.
கோவையிலும், 2 நாட்களாக இரவு நேரங்களிலும் நகரின் புறநகர் பகுதியில் பல மணி நேரம் மழை கொட்டியது. இந் நிலையில்,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்;
ஆக.7ம் தேதி; கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர்.
ஆக.8ம் தேதி; கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி,சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி
ஆக.9ம் தேதி; செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்
-
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் மேடானதால் தண்ணீர் தேக்க முடியாத பரிதாபம் வடமலைக்குறிச்சி கண்மாய் விவசாயிகள் வேதனை
-
திருப்புத்துார் அம்மன் கோயில்களில் முளைப்பாரி
-
மடப்புரம் காளி கோயில் உண்டியலில் வெளிநாட்டு நாணயங்கள், கரன்சிகள்
-
கட்டிக்குளம் கோயிலில் நாளை அவதார விழா
-
வேளானுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை; அவதியில் நோயாளிகள்
-
ஆனந்துார் பள்ளி வளைவில் சென்டர் மீடியன் வேண்டும்