ஆசிய கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்

புதுடில்லி: சவுதி அரேபியாவில் ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடரின் 31வது சீசன் நேற்று துவங்கியது. தரவரிசையில் 76 வது இடத்திலுள்ள இந்திய அணி 27வது முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றது. இதில் 'சி' பிரிவில் சீனா, ஜோர்டான், தொடரை நடத்தும் சவுதி அரேபிய அணிகளுடன் இந்தியா இடம் பெற்றது.
நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, 36வது இடத்திலுள்ள, கடந்த 2022 சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய, ஜோர்டானை எதிர்கொண்டது. கடைசியாக 1995ல் ஜோர்டானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இம்முறை துவக்கத்தில் இருந்து இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதல் பாதியில் ஸ்கோர் 38-38 என சமன் ஆனது.
தொடர்ந்து இந்திய அணி வீரர்கள், ஜோர்டானுக்கு சவால் கொடுத்தனர். போட்டியின் கடைசி நேரத்தில் இந்தியா 78-76 என முந்தியது. கடைசியில் ஜோர்டான் எழுச்சி பெற, போட்டி 80-80 என சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதில் இந்தியா 84-91 என அதிர்ச்சித் தோல்வியடைந்தது. நாளை தனது இரண்டாவது போட்டியில் சீனாவை சந்திக்க உள்ளது.
மேலும்
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
'இறந்த பொருளாதாரத்தில்' இது எப்படி சாத்தியம்; இந்தியாவில் ஓராண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட டிரம்ப் நிறுவனம்!
-
அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஹிமாச்சலில் திடீர் வெள்ளம்; சிக்கி தவித்த 400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் மீட்பு
-
அரசம்பட்டு கோவிலில் தேர் திருவிழாவிற்கு தடை
-
எஸ்.எஸ்.ஐ படுகொலை சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை