மனுஷ்-தியா ஜோடி 'நம்பர்-7' * டேபிள் டென்னிஸ் தரவரிசையில்...

புதுடில்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஜோடி, 2065 புள்ளி பெற்று 3 இடம் முன்னேறி, 7 வது இடம் பெற்றது.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஜோடி, 2205 புள்ளியுடன் 3 இடம் முன்னேறி, 7வது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் பயாஸ் ஜெயின்-அன்குர் (458 புள்ளி, 26வது) ஜோடி 15 இடம் முன்னேறியது. சத்யன், ஆகாஷ் (400) ஜோடி 37 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
சமீபத்தில் பிரேசிலில் நடந்த வேர்ல்டு கன்டெண்டர் தொடரில் இரு பிரிவிலும் இந்திய ஜோடி பைனலுக்கு முன்னேறின. இதையடுத்து உலகத் தரவரிசையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முன்னேற்றம் கிடைத்தது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மானவ் தக்கார், அதிகபட்சம் 43வது இடம் பிடித்தார்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 10 இடம் பின்தங்கி, 47வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற இந்திய வீராங்கனையாக உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா (52), யாஷஸ்வினி (76) பின் தங்கினர்.

Advertisement