டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினா

மான்ட்ரியல்: கனடாவின் மான்ட்ரியலில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-12' வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, உக்ரைனில் மார்ட்டா கோஸ்ட்யுக் ('நம்பர்-28') மோதினர். முதல் செட்டை ரிபாகினா 6-1 என வென்றார். இரண்டாவது செட்டில் 2-1 என முன்னிலை பெற்றார்.
பின் வலது மணிக்கட்டு காயம் காரணமாக மார்ட்டா விலகினார். இதையடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ரிபாகினா, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் ஜெசிக்கா மெனெய்ரோ, கனடாவின் விக்டோரியாகவை எதிர்கொண்டார். இதில் விக்டோரியாக 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement