'ராக்கெட்லன்': இந்தியா சாம்பியன்

ரோட்டர்டாம்: நெதர்லாந்தில் 'ராக்கெட்லன்' உலக சாம்பியன்ஷிப் சாலஞ்சர் கோப்பை தொடர் நடந்தது. டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மின்டன், ஸ்குவாஷ் என நான்கு விளையாட்டுகள் இணைந்தது. நான்கு வித 'ராக்கெட்டுகளில்' (பேட்) வீரர், வீராங்கனைகள் திறமை வெளிப்படுத்துவர்.
இதில், விக்ரமாதித்யா தலைமையில், பிரஷாந்த் சென், நிஹித் சிங், சுஹைல் கபூர், கிருஷ்ணா, நிதி திவாரி, ராகவ் ஜதியா இடம் பெற்ற இந்திய அணி களமிறங்கியது. காலிறுதியில் அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் வலிமையான ஜெர்மனியை சாய்த்தது. பைனலில் இந்தியா, டென்மார்க் அணிகள் மோதின.
முதல் இரு போட்டி முடிவில் இந்தியா 61-68 என பின் தங்கியது. அடுத்து பிரஷாந்த் சென், நிஹித் ஜோடி (35-24) சிறப்பாக செயல்பட்டது. முடிவில் இந்திய அணி 96-92 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, 'ராக்கெட்லன்' உலக சாம்பியன்ஷிப் சாலஞ்சர் கோப்பை கைப்பற்றியது.

Advertisement