நகராட்சி அலுவலகத்தில் ஹவாலா பணம் பறிமுதல்
ஆற்காடு: ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத, 79,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில், 102 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர்களின் ஒப்பந்த காலம் முடிந்து, மகளிர் சுயஉதவி குழு மூலம், துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, தினக்கூலி அடிப்படையில் நாளொன்றுக்கு கூலியாக, 489 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 370 ரூபாய் மட்டுமே வழங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காத நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
இச்சோதனை, நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்தது.
ஆவணங்களை சரிபார்த்ததில், முதற்கட்ட தவணையாக, 370 ரூபாய் வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டதும், அடுத்த கட்டமாக, மீதமுள்ள, 119 ரூபாயை வங்கி கணக்கு மூலம் வழங்க ஆவணங்கள் தயார் செய்து வைத்திருந்ததும் தெரிந்தது.
இந்நிலையில், அங்கு கணக்கில் வராத, 79,500 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்த கால்வாய்
-
'ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகவே உள்ளனர்'
-
பும்ராவுக்கு சலுகை அளிப்பது சரியா... கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு
-
ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே ஆண்டுதோறும் கெடுபிடி: ஹிந்து முன்னணி
-
தோல்வி பயத்தால் தேர்தல் கமிஷன் மீது புகார்
-
தேர்தலில் போட்டியிடாத 334 கட்சிகள் பதிவு நீக்கம்; 22 தமிழக 'லெட்டர் பேடு' கட்சிகளும் சிக்கின