தோல்வி பயத்தால் தேர்தல் கமிஷன் மீது புகார்

பா.ஜ,.வை எதிர்க்கட்சியாக பார்க்காமல், எதிரி கட்சியாக பார்த்து தேர்தல் கண்ணோட்டத்திலேயே தி.மு.க., செயல்படுவதால், பல திட்டங்களை தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியவில்லை.


ஒரு பொய்யை பலமுறை சொன்னால் உண்மையாகி விடும் என நினைத்து, காங்கிரஸ் தலைவர்கள் பொய் குற்றச்சாட்டை பரப்புகின்றனர். தோல்வி பயத்தால், தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.

தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்காளர் விஷயத்தில் ஏன் இவ்வளவு பயம்? நீங்கள் நல்லாட்சி செய்தால், உங்களுக்கு ஓட்டு கிடைக்கப் போகிறது. தோல்வி பயத்தில் தான் பல சந்தேகம் வருகிறது.




தென் மாநிலங்களிலேயே தமிழகம் தான், சட்டம் - ஒழுங்கில் மிக மோசமாக உள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை தி.மு.க., அரசு ஏற்படுத்தி இருக்கிறது. ஓட்டு வங்கிக்காகவே கல்வி துறை இருப்பதாக தி.மு.க., நினைக்கிறது.

- வாசன், தலைவர், த.மா.கா.,

Advertisement