'ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகவே உள்ளனர்'
திருமங்கலம்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகவே உள்ளனர் என மதுரை திருமங்கலம் பாரபத்தியில் ஆக.21ல் நடக்கவுள்ள தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிகளை பார்வையிட்ட அதன் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தேர்தல் மேலாண்மை பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.
பின் அருண்ராஜ் கூறியதாவது: லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளக்கூடிய மாநாட்டில் குடிநீர், பாதுகாப்பு, பார்க்கிங் வசதிகள் போதியளவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டை விட இரு மடங்கு தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மாநாட்டிற்கு அனுமதி கேட்டு போலீஸிடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். குழந்தைகளுக்கு விஜயை மிகவும் பிடிக்கும். பாதுகாப்புக் கருதி அவர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது.
த.வெ.க., தலைமையில் 2026ல் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார்.
மேலும்
-
காசாவை கைப்பற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளையை நிறுத்தியது ஜெர்மனி
-
கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்!
-
மகளிர் உதவி திட்டத்தில் 26 லட்சம் போலி பயனாளிகள்
-
கடவுள் ராமர் பற்றிய அவதுாறு: வைரமுத்துவுக்கு பா.ஜ., கண்டனம்
-
அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வந்த தேர்
-
வெளி மாவட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி