இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் சிக்கல்: குழந்தைகள், பெற்றோருக்கு நெருக்கடி

திருப்பூர்; 'இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் குழந்தைகளிடம், கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகளால், பெற்றோர், குழந்தைகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்' என, புகார் எழுந்துள்ளது.
கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:ஏழை, பணக்காரர் என்ற பாகுபடின்றி, அனைவருக்குமான கல்வி பயிலும் வாய்ப்பை, தனியார் பள்ளிகளில் உருவாக்கி தரும் நோக்கில், கடந்த, 2008ல், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவுற்ற பொருளாதார சூழலில் உள்ள குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்பை, தனியார் பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதன்படி இல வச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீதம் அளவுக்கு இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வழிவகுக்கப்பட்டது. ஆனால், இதை அமல்படுத்துவதில், தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், அதைச் செயல்படுத்துவதற்கான ஜனநாயக கடமை, பொறுப்பு ஆகியவற்றை சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களால் புரிந்து கொள்ளாததால் தான், தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கப்படாததால், இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துமாறு பள்ளிகள் வற்புறுத்துகின்றன.
இதனால், பெற்றோரும், குழந்தைகளும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
கல்விக்கொள்கை தொடர்பாக, மத்திய, மாநில அரசுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக, ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பது சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கும் செயல். எனவே, மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு தாமதமின்றி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும்
-
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
-
அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார் பிரதமர் மோடி!
-
இந்திய பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்; அமேசான், வால்மார்ட் முடிவு
-
குற்றவாளிகளுடன் தொடர்பு: இன்ஸ்., மீது நடவடிக்கை
-
வன்கொடுமை சட்ட வழக்கு டி.எஸ்.பி., 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு தடை
-
வீடு, கோவில்களில் வரலட்சுமி விரதம் கோலாகலம்; கணவரின் ஆயுள் வேண்டி பெண்கள் வழிபாடு