இந்தியாவுடன் முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை; சொல்கிறது அமெரிக்கா

வாஷிங்டன்: வரிவிதிப்பு காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள், மீண்டும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியப் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவுக்கு உச்சகட்ட அதிருப்யை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடுத்தடுத்த வரி விதிப்புகளால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேற்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியுள்ளார். இது அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலூட்டியுள்ளது.
வரிவிதிப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இந்தியாவுடன் முழுமையான, வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூறியிருப்பதாவது; இந்தியாவிடம் அதிபர் டிரம்ப்பின் கவலை குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் மீது வரியை சுமத்தியுள்ளார். இந்தியா எங்களின் மூலோபாய கூட்டாளி. இந்தியாவுடன் முழுமையான, வெளிப்படையான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது தொடரும்.
அமெரிக்க நலன்களை முன்னேற்றுவதும், கூட்டாளி நாடுகளுடன் முழுமையான பேச்சுவார்த்தை நடத்துவே எங்களின் நோக்கம். இந்த விவகாரத்தில் பிற நாடுகளின் தலையீடு இன்றி, இந்தியா - அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.










மேலும்
-
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
-
அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார் பிரதமர் மோடி!
-
இந்திய பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்; அமேசான், வால்மார்ட் முடிவு
-
குற்றவாளிகளுடன் தொடர்பு: இன்ஸ்., மீது நடவடிக்கை
-
வன்கொடுமை சட்ட வழக்கு டி.எஸ்.பி., 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு தடை
-
வீடு, கோவில்களில் வரலட்சுமி விரதம் கோலாகலம்; கணவரின் ஆயுள் வேண்டி பெண்கள் வழிபாடு