சவுதியில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழர் உடல் அனுப்பி வைப்பு

ஜெட்டா : திருநெல்வேலியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ஜவஹர் சுமன், கடந்த 10 ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் ஜுபைலில் பணிபுரிந்து வந்தார். அங்கே மின்சாரம் தாக்கியதால் ஜூலை22ல் அன்று துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்த துயரமான சம்பவத்துக்குப் பின்னர், இது தொடர்பான தகவல் NRTIA கு தெரிவிக்கப்பட்டது. யூனிடெட் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், NRTIA தம்மாம் ஒருங்கிணைப்பாளருமான சிக்கந்தர் பாபு மற்றும் துணை ஒருங்கிணைப்பாளருமான குண்டு பிலால் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள மறைந்தவரின் குடும்பத்தினர் திரு. குண்டு பிலால் அவர்களுக்கு Power of Attorney (அதிகார பத்திரம்) வழங்கினர். NRTIA இளைஞர் அணி செயலாளர் அஷ்ரப், பஹத் மற்றும் ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் முருக லிங்கம் ஆகியோரின் தன்னலமற்ற, நேர்மையான ஒத்துழைப்பின் மூலம் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட்டு, ஜவஹர் சுமனின் உடல் ஆகஸ்ட் அன்று திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டது.

NRTIA சட்ட உதவியாளராகவும் , ரியாத் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட் அவர்கள், சென்னையில் உள்ள NRT மேற்பார்வையாளர் குபேரன் வெங்கடேசனுடன் இணைந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து மறைந்தவரின் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளைச் செய்து வழங்கவும் தொடக்கத்திலிருந்து நிறைவு வரை அனைத்து செயல்முறைகளில் வழிகாட்டி ஆதரவளித்தார்.

அனைவரின் நேர்த்தியான, கருணைமிகு ஒத்துழைப்பின் மூலம் இறந்தவரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

Advertisement