ஆடி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மலைபட்டி காளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்தது.

அய்யனார், கருப்ப சுவாமி, காளியம்மனுக்கு ஆடியை முன்னிட்டு பொங்கல் விழா ஆக.1ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று அம்மனுக்கு பிள்ளையார் கோயிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்து பாலாபி ஷேகம் செய்தனர். சுற்றி யுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement