தமிழக, கேரள வனப்பகுதியில் 2668 வரையாடுகள்

பாலக்காடு:கேரள மாநிலத்தில் உள்ள இரவிகுளம் தேசியப் பூங்காவின், 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கேரளா, தமிழக வனத்துறை இணைந்து வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தியது.
இதுகுறித்து, கேரள மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராஜேஷ் ரவீந்திரன் கூறியதாவது: தமிழகம், கேரளா இணைந்து முதல் முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில், கேரளா வனத்தில், 89 தொகுதிகளிலும், தமிழகத்தில், 182 தொகுதிகளிலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் வரையாடுகளின் வாழ்விடங்கள் உள்ள பகுதிகளில், ஏப்., மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கேரளாவின், 19 வனப்பிரிவுகளில் வரையாடுகளின் கணக்கெடுப்பு நடந்தது. இரவிகுளம் தேசிய பூங்காவில், 841 வரையாடுகள் உள்ளன. கேரளாவில் மூணாறு பகுதியில் அதிக அளவு வரையாடுகள் உள்ளன.
தமிழகத்தில் முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும், கேரளா எல்லையோடு சேர்ந்துள்ள புல் மேடுகளிலும் வரையாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரு மாநில வனத்தில், மொத்தமுள்ள, 2668 வரையாடுகளில், கேரளாவில் 1365- வரையாடுகளும், தமிழகத்தில் 1303 வரையாடுகளும் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
சிங்கபெருமாள்கோவில் ரயில்வே கேட் சாலையை சீரமைக்க வேண்டுகோள்
-
வேளச்சேரியில் சீரான மின் சப்ளைக்கு மின் நிலையத்தின் திறன் அதிகரிப்பு
-
நான்காம் வார ஆடி விழா திருப்போரூரில் விமரிசை
-
இன்று இனிதாக .... (11.08.2025 ) சென்னை
-
வேளாண் துறை அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
-
ரேஷன் கடைக்கு புது கட்டடம் சின்னகளக்காடியில் வேண்டுகோள்