வேளாண் துறை அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:வேளாண் துறை அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், திருப்போரூர் வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இடப்பற்றாக்குறை, சேதமடைந்த கட்டடம் போன்ற பல்வேறு காரணங்களால், புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
அதன்படி, திருப்போரூரில் இருந்து 6 கி.மீ.,யில் உள்ள செம்பாக்கம் ஊராட்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், புது கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, இரண்டு தளங்களுடன், திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
புதிய கட்டடம் செயல்பட்டு வந்தாலும், அலுவலக வளாகப் பகுதி திறந்தவெளியாக உள்ளதால், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. கால்நடைகள் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
பாதுகாப்பு கருதி, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலக வளாகப் பகுதிக்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!