போலி தூதரகத்தை தொடர்ந்து போலி சர்வதேச போலீஸ் ஸ்டேஷன்; உபியில் அடுத்தடுத்து அதிர்ச்சி

2

நொய்டா: உத்தரபிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்ததை சம்பவத்தைத் தொடர்ந்து, போலி சர்வதேச போலீஸ் ஸ்டேஷன் நடத்தி வந்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீசார் கைது செய்தனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது மோசடி கும்பல் ஒன்று நொய்டாவில் சர்வதேச போலீஸ் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விபாஷ், அரக்யா, பாபுல், பின்டுபால், சாம்பம்தால், ஆஷிஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு அதிகாரிகளைப் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் போலீஸாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

மேலும், அரசு ஊழியர்களைப் போல நடித்து, www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்று வந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement