65,120 பயனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சிதம்பரம் : சிதம்பரத்தில் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் அடுத்த கடவாச்சேரியில், தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'இத்திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் 1,460 ரேஷன் கடைகளுக்குட்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 44,312 ரேஷன் அட்டைகளில் உள்ள 60,069 பயனாளிகள் மற்றும், 5,051 ரேஷன் அட்டைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 65 ஆயிரத்து 120 பயனாளிகளின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்க வழிகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் சங்கர், நடராஜன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

புவனகிரி கீரப்பாளையத்திலும் தா யுமானவர் திட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, பி.டி.ஓ.,க்கள் பார்த்திபன், ஆனந்தன், சேர்மன் கந்தன், ஒன்றி ய செயலாளர்கள் சபாநாயகம், பாலு, திருமூர்த்தி, வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

@block_B@

முதியோர் வசிக்க இடம் ஏற்பாடு

உசுப்பூரில் அமைச்சர் பன்னீர்செல்வம் சாலையோரம் ஓலை குடிசையில் வசிக்கும் வயதான தம்பதிக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். அப்போது, ஏன் சாலையோரம் வசிக்கிறீர்கள் என அமைச்சர் கேட்க, வேறு இடம் இல்லை என தம்பதியினர் கூறினர். உடன், கலெக்டரிடம், பெரியப்பட்டு பகுதியில், முதியோருக்கு மனை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.block_B

Advertisement