சென்னை - ராஜஸ்தான் உட்பட 5 விரைவு ரயில்களின் சேவை ரத்து
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - ராஜஸ்தான் உட்பட ஐந்து விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
தெலுங்கானா மாநிலத்தில் சில இடங்களில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.
பீஹார் மாநிலம் தானாபூரில் இருந்து சென்னை பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., செல்லும் பெங்களூரு விரைவு ரயில், வரும் அக்., 12, 13ம் தேதிகளிலும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் விரைவு ரயில், அக்., 14, 15ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது
தானாபூர் - எஸ்.எம்.வி.டி., சிறப்பு ரயில், அக்., 14ம் தேதியிலும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் சிறப்பு ரயில், அக்., 16ம் தேதியிலும் ரத்து செய்யப் படுகிறது
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் - கோவை சிறப்பு ரயில், அக்., 11ம் தேதியிலும், கோவை - தன்பாத் சிறப்பு ரயில், அக்., 14ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி செல்லும் விரைவு ரயில், அக்., 15ம் தேதியன்று ரத்து செய்யப்படும். பகத் கி கோதியில் இருந்து சென்னை வரும் ரயில், அக்., 18ம் தேதியன்று ரத்து செய்யப்படுகிறது
கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக தானாபூர் செல்லும் விரைவு ரயில், அக்., 13ம் தேதி ரத்து செய்யப்படும். தானாபூர் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில், அக்., 15ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வாரிசு சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: புரோக்கருடன் சிக்கினார் விஏஓ
-
டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
-
இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு
-
வெற்றியின் அடையாளம் அழகல்ல - தனித்துவமே...
-
வக்கீல்கள் சம்பளம் உயர்கிறது: கேரளா அரசு அறிவிப்பு
-
உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்கிறார் ராகுல்