அவரை பற்றி பேசுவது வீண்: மஹூவா மொய்த்ரா குறித்து கல்யாண் பானர்ஜி விமர்சனம்

கோல்கட்டா: '' திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி., மஹூவா மொய்த்ராவை பற்றி பேசுவது வீண்,'' என அக்கட்சி மூத்த எம்.பி., கல்யாண் பானர்ஜி கூறியுள்ளார்.



திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கல்யாண் பானர்ஜி - மஹூவா மொய்த்ரா இடையே மோதல் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர், கட்சி எம்.பி.,க்களிடம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா பானர்ஜி, ' ஒருங்கிணைப்பு இல்லாததற்கு சில எம்.பி.,க்களை திட்டிய அவர், சிலர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும்' கடிந்து கொண்டார். தான் குறிவைக்கப்பட்டதாக உணர்ந்த கல்யாண் பானர்ஜி, லோக்சபா கொறடா பதவியை ராஜினாமா செய்தார்.


இந்நிலையில், கல்யாண் பானர்ஜி இன்று கூறியதாவது: மஹூவா மொய்த்ரா என்னுடைய விவாதிக்கப் போவதில்லை. அவர் தரங்குறைந்தவர். அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவரால்ல பலரிடம் கெட்ட பெயரை வாங்கி உள்ளேன். அவரை பற்றி பேசுவது நேரத்தை வீண்டிப்பதற்கு சமம். எனது ஆற்றலை இழக்க செய்யும். எனது கவனத்தை பெறுவதற்கு அவர் தகுதியானவர் அல்ல. அவர் பற்றி கவனம் செலுத்தியது எனது தவறு.
எனது நண்பர் ஒருவர் அனுப்பிய செய்தி மூலம் தான், அவரை பற்றி பேசுவது உகந்தது அல்ல. அதை விட ஏராளமான பணிகள் உள்ளன என்பதை உணர்ந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement