ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் கைது

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.

மணலுார்பேட்டையை சேர்ந்தவர் நிஜாம் மகன் முஷாரப், 25; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் மாலை பஸ் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் சிலம்பரசன், 25; கண்ணன் மகன் சதீஷ், 32; ஆகியோர் ஆட்டோவை சவாரிக்கு அழைத்தனர். உடல்நிலை சரியில்லை வர முடியாது என முஷாரப் கூறினார்.

ஆத்திரமடைந்த இருவரும் முஷாரப்பை திட்டி, ஆட்டோ கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் முஷாரப்பிற்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்த முஷாரப் தந்தை நிஜாம், 55; அளித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து சதீஷை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement