பீஹாரில் ஆகஸ்ட் 17ல் வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் அறிவிப்பு

புதுடில்லி: ஆகஸ்ட் 17ம் தேதி அன்று பீஹாரில் 'வாக்காளர் உரிமை யாத்திரை' தொடங்குகிறோம் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அறிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 17ம் தேதி அன்று பீஹாரில் 'வாக்காளர் உரிமை யாத்திரை' தொடங்குகிறோம். பீஹார் மண்ணில் இருந்து வாக்கு திருட்டு எதிராக நேரடிப் போராட்டத்தை நடத்துகிறோம்.
இது வெறும் தேர்தல் பிரச்னை மட்டுமல்ல. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் 'ஒரு நபர்-ஒரு வாக்கு' என்ற கொள்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்க்கமான போர்.
நாடு முழுவதும் மோசடி இல்லாத வாக்காளர் பட்டியலை நாங்கள் உறுதி செய்வோம். இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஒவ்வொரு குடிமகனும்
எங்களுடன் இணையுங்கள். இந்த முறை, வாக்கு திருடர்களின் தோல்வி, மக்களின் வெற்றி, அரசியலமைப்பின் வெற்றி கிடைக்கும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு