மர்ம விலங்கை பிடிப்பதில் வனத்துறை... அலட்சியம்; விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி

செஞ்சி: மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக கால்நடைகளை தாக்கி கொன்று வரும் மர்ம விலங்கை பிடிப்பதில் அலட்சியமாக இருக்கும் வனத்துறை மீது விவசாயிகளும் பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார், செஞ்சி, கண்டாச்சிபுரம், திண்டிவனம் தாலுகாவில் கடந்த ஓராண்டில் மர்ம விலங்கு தாக்கியதில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், 15க்கும் மேற்பட்ட கன்று குட்டிகள், இரண்டு மான்கள், நாய்கள் இறந்துள்ளன.
கடந்த 9ம் தேதி இரவு கொங்கரப்பட்டு கிராமத்தில் 41 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றது. நேற்று முன்தினம் மீண்டும் கொள்ளார் அருகே குடிசை பாளையத்தில் 5 ஆடுகளை கொன்றது.
வனத்துறையினர் குழப்பம் கால்நடைகள் இறந்த தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு செல்லும் வனத்துறையினர் கேமரா பொருத்துவது, கூண்டு வைப்பது, கால்தடங்களை பதிவு செய்வது என வழக்கமான சடங்கை செய்கின்றனர்.
தாக்குதல் நடத்தும் மர்ம விலங்கு மறுநாள் அந்த இடத்திற்கு வருவதில்லை. இதனால் கேமராவிலும், கூண்டிலும் சிக்க வில்லை.
வனத்துறை எடுத்துள்ள கால் தடங்களில் இரண்டு விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளது. அதை கொண்டு எந்த விலங்கு என்பதை உறுதி செய்ய முடியாமல் வனத்துறையினர் நீண்ட குழுப்பத்தில் உள்ளனர். ஆனால் மர்ம விலங்கை பார்த்த விவசாயிகளும், பொது மக்களும் சொல்லும் அடையாளம் கழுதை புலியுடன் ஒத்து போகிறது.
வல்லம், மயிலம் ஒன்றியத்தில் கடந்த இரு மாதங்களாக, மர்ம விலங்கு 15 கி.மீ., சுற்றளவில் மட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த பகுதியில் காடும் இல்லை. ஆனால் தொண்டியாற்றை ஒட்டி ஏராளமான புதர்கள் உள்ளன. பகல் நேரத்தில் மர்ம விலங்கு இதில் பதுங்கி இருந்து, இரவில் வெளியே வருகிறது. மர்ம விலங்கு தானே வந்து கூண்டில் சிக்கும் என வனத்துறையினர் காத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை இல்லை இதுவரை வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தவில்லை. வால்பாறை, முதுமலை போன்ற வனவிலங்கு அதிகம் உள்ள சரணாலயங்களில் பணிபுரியும் வனவிலங்கை பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற வன ஊழியர்களை வரவழைத்து, 'டிரோன்' உதவியுடன், பெரிய குழுவாக பகலில் தேடுதல் வேட்டை நடத்தி இருந்தால் மர்ம விலங்கு எப்போதோ பிடிபட்டிருக்கும். வனத்துறை இதுவரை இதற்கான நடவடிக்கையை எடுக்க வில்லை.
பீதியில் விவசாயிகள் தொண்டியாற்றை ஒட்டி உள்ள கொங்கரப்பட்டு, ஆசூர், ரெட்டணை பகுதி மக்கள் மர்ம விலங்கு அவர்களை தாக்க வாய்ப்புள்ளாக கருதி அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இதனால் இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் நீர் பாய்ச்சுவதற்கும் பலருடன் இணைந்து செல்கின்றனர். மேலும் இரவில் தோட்டங்களில் தங்குவதையும் தவிர்த்து வருகின்றனர்.
நிவாரணம் இல்லை இதுவரை இறந்த கால்நடைகள் வனவிலங்கு தாக்குதலில் இறந்தது என்பதை உறுதியாகாமல் இருப்பதால், வனத்துறை விதிகளின் படி எந்த நிவாரணமும் வழங்காமல் உள்ளனர். ஆளும் தரப்பினர் யாரும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இருப்பதும், எந்த விதமான உதவியும் செய்யாமல் இருப்பதும் பாதிக்கப்பட்டவர்களிடமும், பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட வன அலுவலர் விசாரணை விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் கார்த்தியாயினி நேற்று கொங்கரப்பட்டு கிராமத்தில், 41 ஆடுகள் இறந்த இடத்தை பார்வையிட்டு, இறந்த ஆடுகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார். தடயங்கள் ஆய்வுக்கு அனுப்பி இருப்பதால் முடிவு வந்ததும் வனவிலங்கு என்பது உறுதியானால் நிவாரணம் வழங்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களிடம் கூறி உள்ளார்.
@block_B@
கால்நடைகளை மர்ம விலங்கு கடித்து கொன்று வருவது குறித்து கலெக்டர், மாவட்ட வன அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளேன். இறந்த கால்நடைகளுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்து தலா 4,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து வரவேண்டும். கூடுதல் கேமராக்களை பொருத்துவதுடன், மர்ம விலங்கை கண்டறிந்து விரைவில் பிடிக்க வேண்டும். -சிவக்குமார், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,block_B
@block_B@
கொங்கரப்பட்டில் இதுவரை 8 பேரின் ஆடு, கன்றுகுட்டிகளை மர் ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கால்நடைகள் இறந்து விட்டன. இரவில் விவசாயிகள் கழனிக்கு செல்ல பயப்படுகின்றனர். கிராம மக்கள் கழுதை புலி என்கிறனர். எனது கழனி யிலும் சில தினங்களுக்கு முன்பு நாய் குரைத்தது. நான் வெளியே வந்து பார்த்த போது மர்ம விலங்கு நாயை போன்று சிறியதாக இருந்தது. -மனோகரன், விவசாயி, கொங்கரப்பட்டு.block_B
@block_B@
எனது வீடு, நிலம் இரண்டும் வல்லம், கொங்கரப்பட்டு சாலையில் உள்ளது. கடந்த வாரம் இரவு 8:10 மணிக்கு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றேன். அப்போது அவுரி செடியில் சத்தம் வந்ததால் டார்ச் லைட் அடித்து பார்த்தேன். அங்கு இரண்டரை அடி உயரத்தில் கண்கள் பெரிதாக, மஞ்சள், கருப்பு நிறத்தில் விலங்கு இருந்தது. அதை பார்த்ததும் பயந்து அங்கிருந்து உயிர் பிழைத்தால் போதும் என ஓடி வந்து விட்டேன். -பரதாழ்வார், விவசாயி, கொங்கரப்பட்டு.block_B
@block_B@
இரண்டு மாதமாக தொண்டியாற்று பகுதி கிராமங்களில் மர்ம விலங்கு தாக்கி கால்நடைகள் இறந்து வருவது குறித்து ஆளும் கட்சி கண்டு கொள்ள வில்லை. எங்கள் ஊரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து விட்டன. அரசு தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை. குறைந்த பட்சம் ஆளும் கட்சியினர் ஆறுதல் சொல்வதற்கும் வரவில்லை. -பன்னீர் செல்வம் ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர்.block_B
@block_B@
எங்களுக்கு வாழ்க்கையே கால்நடை வளர்ப்புதான். கடந்த, 9ம் தேதி இரவு 41 ஆடுகளை மர்ம விலங்கு கொன்ற பிறகு மற்ற ஆடுகளை எப்படி காப்பாற்றுவது என பயம் ஏற்பட்டுள்ளது. இறந்த ஆடுகள் பெரும்பாலானவை அடுத்த சில நாட்களில் குட்டி போடும் நிலையில் இருந்தவை. 4 லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. காயம் பட்ட 15 ஆடுகளுக்கு சிகிச்சையளிக்க பணம் இன்றி தினமும் சிரமப்பட்டு வருகின்றேன். -பிரகாஷ், பாதிக்கப்பட்டவர்.block_B
மேலும்
-
வங்கம் இல்லாமல் சுதந்திரம் இல்லை: மம்தா
-
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்
-
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஜனநாயக உரிமையை பறிப்பது தான் சமூக நீதியா: திமுகவுக்கு பாஜ தலைவர் கண்டிப்பு
-
முகாமினால் பயனடைந்தவர்கள் விபரம் வெளியிடப்படுமா: திமுகவுக்கு பாமக கேள்வி
-
பீஹாரில் ஆகஸ்ட் 17ல் வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் அறிவிப்பு