'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்   

புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம், வடதலைக்குளம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். மண்டல துணை தாசில்தார் வேல்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலாமணி முன்னிலை வகித்தனர்.

தாசில்தார் அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். 15 துறைகளை சார்ந்த 46 சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், முன்னாள் கவுன்சிலர் ஜெயமாலா, நிர்வாகிகள் அரங்கராஜாராமன், செல்வகுமார், மணிவண்ணன், மனோஜ், அஜய், கலைச்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஊராட்சி செயலர் ராமர் நன்றி கூறினார்.

Advertisement