சுதந்திர தினத்தில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு



ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் நாளை (15) சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவை தொடர்புடைய பஞ்.,கள் மூலம், மக்களுக்கு அறிவிக்கப்படும்.

பொது நிதி செலவினம் பற்றி விவாதித்தல், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், 100 நாள் வேலை திட்ட முன்னேற்றம், ஜல்ஜீவன் இயக்கப்பணிகளை உறுதி செய்தல், இதர பொருட்கள் பற்றி விவாதிக்கப்படும். இக்கூட்டங்களை கண்காணிக்க வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையில் பற்றாளர்கள், பஞ்., அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement